Responsive Advertisement 2

இலங்கைக்குள் தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..!

 


மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்குள், தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துள்ளது.

இந்நிலையில், தாழமுக்கம் இன்று (26) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெதாழமுக்கம்ரிவிக்கப்படுகின்றது.

அதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொந்தளிக்கும் கடல் 

இலங்கைக்குள் தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! | Weather Today Sri Lanka

எனவே, நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (06N – 14N, 78E – 85E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மீன்வர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது, கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து வட கிழக்காக 110km தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது.

பலத்த காற்று 

இலங்கைக்குள் தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! | Weather Today Sri Lanka

இது தென்மேற்கு கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையினுள் நுழைந்துள்ளது.

இந்த தாழக்கம் இலங்கையை ஊடறுத்து இன்று கன்னியாகுமரியின் கொமோரின் பிரதேசத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 வரை காணப்படுவதுடன் (காற்றின் வேகமானது 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும்) கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாளை முதல் கடலின் கொந்தளிப்பு படிப்படியாக குறைவடையும்.

இலங்கைக்குள் தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! இலங்கைக்குள் தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! Reviewed by Admin on December 26, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3