Responsive Advertisement 2

டயானாகமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகார்

 



இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் நேற்று(20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் கமகே பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் எனவே இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான நடவடிக்கையானது அதிகார துஷ்பிரயோகம் என்றும் இது குறித்து ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


டயானாகமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகார் டயானாகமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவில் புகார் Reviewed by Admin on December 21, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3