போதைப் பொருள் பயன்பாட்டினால் குடும்ப ரீதியில் பெண்கள்,சிறுவர்கள் பாதிப் பை கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பில் செயலமர்வு...!
( எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்)
டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பரீதியில் பெண்கள்,சிறார்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு கல்முனையில்(18) இடம்பெற்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலா இணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாலர்களாக சிரேஸ்ஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.எப்.சிபாயா,
பி. ஜெனித்தா,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.நஜீப்,
எஸ்.நிஸாந்தினி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அலுவலக கணக்காளர் ஆர்.அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலார்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Reviewed by Admin
on
December 19, 2022
Rating:






No comments: