(சியாத் .எம்.இஸ்மாயில்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் உன்னத எண்ணக்கருவுக்கு அமைவாக "ஐக்கிய மக்கள் சக்தி மூச்சு" (சுவாசம்) எனும் வைத்தியசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அத்திட்டத்தின் கீழ், 56 ஆவது நிகழ்வாக, சஜித் பிரேமதாஸவினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை குழுத் தலைவர் டாக்டர். எம்.ஏ.றக்கீஸ்து தலைமையில் நேற்று (24) வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன் போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஜி. ரொஷான் போலிடம் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸவினால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு
Reviewed by Admin
on
December 25, 2022
Rating:
Reviewed by Admin
on
December 25, 2022
Rating:







No comments: