Responsive Advertisement 2

முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயன்கன்குளம் காட்டுப் பகுதியில் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.


கால்நடை மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு நேற்று சென்ற நீதிமன்ற அதிகாரிகள் தடயவியல் பொலிசார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று குறித்த இடத்திலிருந்து எச்சங்களை மீட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் வருகை தந்த மாவட்ட பதில் நீதவான் எச்சங்களை பார்வையிட்டார்.

இதேவேளை எச்சங்களை பார்வையிட்ட சுகாதார வைத்திய உயரதிகாரி, குறித்த எச்சங்கள் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் எனவும் சட்டவிரோத சிசு கருக்கலைப்பு ஒன்றின் மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

சம்பவத்தில் சிசுவின் மண்டை ஓடு மற்றும் என்புகள், சுற்றப்பட்டிருந்ந துணிகள் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் ஐயன்கன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு Reviewed by Admin on December 24, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3