இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்திற்குச் சுமார் 70 ரொஹிங்கிய அகதிகள் சென்றுசேர்ந்துள்ளனர்.
கடந்த நவம்பரிலிருந்து இதுவரை 6 படகுகளில் அகதிகள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர். பங்களாதேஷில் உள்ள முகாம்களில் கடுமையான நிலையை எதிர்நோக்கும் அகதிகள், வேறு இடங்களைத் தேடிச் செல்கின்றனர். அந்த முகாம்களில் சுமார் 1 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.
மியன்மாருக்குத் திரும்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் ரொஹிங்கிய மக்கள் வேறு இடங்களில் தஞ்சம் புக முயல்கின்றனர்.
ரொஹிங்கிய மக்கள் கடந்த ஆண்டு மிக ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியதாக, ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு குறிப்பிட்டது.
70 ரொஹிங்கிய அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சம்
Reviewed by Admin
on
February 19, 2023
Rating:
Reviewed by Admin
on
February 19, 2023
Rating:


No comments: