சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு தொழுநோய் தொடர்பான அம்பாரை மாவட்ட மாநாடொன்று இன்று புதன் கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக கல்முனை ஆதார வைத்திய சாலையின் தோல் நோய்களுக்கான விஷேட வைத்திய நிபுணர் ஐ.எல் மாஹில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்தியர் எம் ஏ சி எம் பஸால் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்தியத்தின் தொழுநோய் தொடர்பான புள்ளி விபரங்களை பொதுச்சுகாதார பரிசோதகர் ஜீ. சுகந்தன் முன்வைத்தார்
இந்நிகழ்வுக்கான அனுசரணையை Alliance Development Trust நிறுவனம் வழங்கியிருந்தது.இதன் பணிப்பாளர் ரகு பாலச்சந்திரன் தமது நிறுவனம் தொடர்பில் இங்கு விஷேட உரையாற்றினார்.இதன் போது எதிர்காலத்தில் தொழுநோயை கல்முனை பிராந்தியத்திலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆலோசனைகள் அபிப்ராயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இங்கிலாந்தின் தொழுநோய் மிஸ்ஸனின் பிரதிநிதி சிஅன் அருலானந்தன் மற்றும் ஏடிரீ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஜெபசுதன்,பிராந்திய சுகாதாரப் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ.வாஜித் பணிமனையின் பிரிவுத்தலைவர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர்கள் பொது சகாதார பரிசோதகர்கள் சர்வமதத்தலைவர்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்இங்கிலாந்தின் தொழுநோய் மிஸ்ஸனின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
Reviewed by Admin
on
February 22, 2023
Rating:





No comments: