Responsive Advertisement 2

திடீரென கொளுந்து விட்டெரிந்த தொழிற்சாலை - வெளியாகாத சேத விபரம்!



நுவரெலியாவில் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை நுவரெலியா - கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது.

பழமையான தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட  தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது.

திடீர் தீ விபத்து



அங்கு கழிவு தேயிலை அரைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று அதிகாலை தொழிற்சாலையில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டு,  கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

கந்தப்பளை காவல்துறையினர், தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

காவல்துறை விசாரணை



குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தப்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவரும் இருக்கவில்லை.

தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் இன்னும் உரிய வகையில் மதிப்பீடு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திடீரென கொளுந்து விட்டெரிந்த தொழிற்சாலை - வெளியாகாத சேத விபரம்! திடீரென கொளுந்து விட்டெரிந்த தொழிற்சாலை - வெளியாகாத சேத விபரம்! Reviewed by Admin on March 18, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3