ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபாபு ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் பிப்ரவரி 8ம் திகதி திருமணம் நடைபெற்றது.
அப்போது வாலிபர் தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை மனைவிக்கு தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், கொஞ்சம் கூச்ச நாச்சம் இல்லாமல் அந்த வீடியோவை வட்ஸ் எப் குரூப்பில் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்டு பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மருமகனிடம் இது தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பஞ்சாயத்தில் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அப்படி இருந்த போதிலும் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் பெண்ணின் மாமியார் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் புது மாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே முதலிரவு காட்சிகளை புதுமாப்பிள்ளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது முதலிரவு வீடியோவை வௌியிட்ட வாலிபர்!
Reviewed by Admin
on
March 03, 2023
Rating:
Reviewed by Admin
on
March 03, 2023
Rating:

No comments: