பொரலஸ்கமுவ பகுதியில் முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ பொலிஸில் பிரிவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் நேற்றிரவு (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுகளில் திருடப்பட்ட 3 முச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 32 வயதிற்குட்பட்ட தெஹிவளை, நாவலப்பிட்டி, ரொசெல்ல, ஹட்டன், கொட்டகலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று(07) ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Admin
on
March 07, 2023
Rating:

No comments: