Responsive Advertisement 2

தும்பைச் செடியின் மருத்துவ பயன்கள்

 



மனிதர்களுக்கு குறட்டை பெரிய தீராத வியாதியாக உருவெடுத்து இருக்கிறது. குறட்டை பிரச்சினையை தும்பை பூக்கள் கொண்டு சுலபமாக குணமாக்கலாம். ஐம்பது தும்பை பூக்களை எடுத்து, 50 மில்லிலிட்டர்  நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி மூக்கில் மூன்று சொட்டுக்கள் வீதம் இருபத்தியொரு நாட்கள் விட்டுவர குறட்டைவிடும் பிரச்சனைகள் நீங்கும். 


தலைவலி, சைனஸ், தலை நீர்கோத்தல், பிரச்சினைகளுக்கு தும்பை செடியின் இலைகளை சாறு எடுத்து மூன்று சொட்டுக்கள் மூக்கில் விட்டால் அனைத்தும் சரியாகிவிடும். பாம்பு கடித்துவிட்டால் தும்பை செடியின் இலைகளை வாயில் போட்டு மென்று தின்றால் வாந்தி, பேதி வழியாக விஷம் வெளியே வந்து விடும். ஆனால் ஒருநாள் முழுவதும் தூங்க கூடாது. மூன்று நாட்கள் உப்பில்லாமல் பத்தியம் இருப்பது அவசியம். தும்பை செடியின் பூக்களைப் பறித்து நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால், தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், போன்ற பிரச்சினைகள் தீரும். 


தேள் கடித்தால் தும்பை பூ செடியின் இலைகளை சாறு எடுத்து தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷம் முறியும். தும்பை செடியின் இலைகளை அரைத்து உடம்பில் பூசி வந்தால், சொறி, சிரங்கு விஷக்கடி, அலர்ஜி போன்றவை நீங்கும். உடம்பில் பூசிய உடன் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தும்பைச் சாறும், விளக்கெண்ணையும் கலந்து உட்கொண்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும். தும்பைச் சாறும், வெங்காய சாறும் கலந்து ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆசனவாய் புண்கள் குணமாகும். 


நீண்ட நாட்களாக மார்ச்சளி பிடித்து அவதிப்படுபவர்கள் தும்பைப் பூவை சட்னி செய்து தினமும் ஒருவேளை உட்கொண்டு வந்தால் மார்சளி முற்றிலும் குணமாகும். தும்பை பூ சாறு 500 மில்லி லிட்டர் எடுத்து தேங்காய் எண்ணெய் 500 மில்லி லிட்டர் உடன் சேர்த்து கலந்து நன்றாக காய்ச்சி வெட்டுப் பட்ட காயங்களில் தடவி வந்தால் ஆறாத காயங்கள் வெகு விரைவாகவே ஆறிவிடும். பெண்கள் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களில் அதிகம் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். கர்ப்பப்பை பிரச்சனை உள்ள பெண்கள் தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து நன்றாக காய்ச்சி அந்த சாற்றை வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் குடித்து வந்தால், கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும் கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் சரியாகும். கர்ப்பப்பையில் வரும் கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கும். தும்பை கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாதாரணமாக நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர கபம் சார்ந்த பிரச்சினைகள் தீரும்.


 தீராத வயிற்று வலி, வயிறு கோளாறுகள் அடிக்கடி மலம் கழித்தல், சாப்பிட்ட உடனே மலம் கழித்தல், இதுபோல பிரச்சனை உள்ளவர்கள் தும்பை பூக்களை பறித்து கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, பூக்களோடு தேங்காய் பூ துருவி சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்து, விழுதை சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வயிற்றுக் கோளாறுகள், ஆசன வாயில் புண்கள், தொண்டைக்குழியில் புண்கள், நாக்கில் வரும் புண்கள், வயிற்றுக் குடலில் ஏற்படும் புண்கள், போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் குணமாக்கும் ஆற்றல் வாய்ந்தது தும்பை பூக்கள். தும்பை பூக்களை பறித்து இரவுப்பொழுதில் பனி பெய்யும்போது, பனிப்பொழிவில் வைத்து, காலையில் எடுத்து தும்பை பூக்களை நன்றாக கசக்கி சாறு எடுத்து சாறுகளை கண்ணில் விட்டால் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். தும்பை பூ செடியின் அருகில் அமர்ந்து தும்பை பூக்களை ஒன்று ஒன்றாக பறித்து நாற்பத்தியெட்டு நாட்கள்  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டையில் வரும் கட்டிகள் குணமாகும். 


தொண்டை பகுதியில் வரும் தைராய்டு பிரச்சனையால் சுரக்கும் சுரப்பிகளை சுரக்காமல் செய்து தைராய்டு பிரச்சினையை போக்குகிறது. தும்பை பூ செடியின் இலைகளை நன்றாக அரைத்து உடலில் இருக்கும் தேமல் இடத்தில் தொடர்ந்து பூசிக்கொண்டே வந்தால்,  தேமல் குணமாகிவிடும். விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பை இலையை அரைத்து சிறிதளவு பூச்சிகள் கடித்த இடத்தில் தேய்த்தால் கடி குணமாகும். தும்பை இலைகளை அரைத்து சிறிதளவு எடுத்து உள்ளுக்கும் சாப்பிட வேண்டும். தும்பை இலையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் தலையில் நீர் கோர்த்தல் போன்றவை குணமாகும். தும்பை பூக்களை பறித்து கசக்கி தும்பை பூவின் சாறு மூக்கில் சொட்டு உள்ளே விட்டால் தீராத தலை வலி உள்ளவர்களுக்கு உடனடியாக தலைவலி சரியாகும். தும்பை பூக்களை அதிகாலையில் பசும்பாலில் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தீராத விக்கல் தீரும்.

தும்பைச் செடியின் மருத்துவ பயன்கள் தும்பைச் செடியின் மருத்துவ பயன்கள் Reviewed by Admin on March 30, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3