Responsive Advertisement 2

இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ Cricket | கிறிக்கட் சுற்றுத் தொடர் வெகு சிறப்பாக இடம்பெற்றது.



(சாதிக் எம்.பி)


இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றினை கட்டியெழுப்பும் நோக்கிலும், திறமைகளை வெளிக்கொணரும் நோக்கிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே சிநேகபூர்வ Cricket | கிறிக்கட் சுற்றுத்  தொடர் கடந்த 2023.03.21 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி (தே.பா) குளக்கரை மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.



இந் நிகழ்வானது, பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் மூன்று அணிகளாக….

 

1️⃣ DS - Riders, 

2️⃣ DS - Legends  

3️⃣ DS - Warriors 



என்றடிப்படையில் அணிகள் பிரிக்கப்பட்டு சுற்றுத் தொடரில் மோதிக் கொண்டனர்.


இச் சுற்றுத் தொடரின், மூன்று அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற பலப்பரீட்சையில் இறுதிப் போட்டிக்கு 

DS_Riders Vs DS_Warriors ஆகிய அணிகள் தெரிவாகியிருந்தன. பின் இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் DS_Warriors அணியினர் வெற்றி வாகைசூடி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.



மேலும் இந் நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களும், விஷேட அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். 



மேலும் கௌரவ அதிதிகளாக இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலையின் CMO வைத்தியர் கே.எல்.எம். நக்பர், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம். ஆஹிர் மற்றும் தொழிலதிபர் எஸ்.எம். சபீக்கான் ஆகியோரும் கலந்து கொண்டர். 



மேலும் பிரதேச செயலாளர் அவர்களினால் வெற்றியீட்டிய அணிக்கு வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டது, மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தைப்பிடித்துக் கொண்ட அணிகளுக்குமான கேடயங்களும் ஏனைய அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ Cricket | கிறிக்கட் சுற்றுத் தொடர் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையிலான  சிநேகபூர்வ  Cricket |  கிறிக்கட் சுற்றுத் தொடர் வெகு சிறப்பாக இடம்பெற்றது. Reviewed by Admin on March 23, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3