Responsive Advertisement 2

மாணவன் தூக்கிட்டு தற்கொலை : மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் சோகம்!

 


(மண்டூர் ஷமி)

கொக்குவில் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு வீதி பாலமீன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த (16) வயதுடைய குரேஸ்குமார் ஹரிஸ்ராஜ் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த மாணவன் கா.பொ.த சாதாரணதர வகுப்பில் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த (30)ம் திகதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் இருந்து தனது கற்கை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அன்றைய தினத்தன்று அவரின் சகோதரன் வீட்டுக்கு வந்து மாணவனை அழைத்த போது எவ்வித சத்தமும் இன்றி இருந்த நிலையில் வீட்டின் அறையினுள் உட்சென்று பார்த்தபோது தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது

மட்டக்களப்பு  நீதிமன்ற நீதிவான் பீற்ர் போல்  அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர்  பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார் மேலதிக விசாரணைகளை கொக்குவி;ல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மாணவன் தூக்கிட்டு தற்கொலை : மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் சோகம்! மாணவன் தூக்கிட்டு தற்கொலை : மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் சோகம்! Reviewed by Admin on April 01, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3