Responsive Advertisement 2

அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக ஏ.இம்றுபாஸ்கான் நியமனம்


 (எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தராக ஒலுவிலைச் சேர்ந்த ஏ இம்றுபாஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் செயற்படும் வகையில் ஏ. இம்றுபாஸ்கான் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளரினால் வருடாந்த இடமாற்றத் திட்டத்திற்கமைவாக அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏழு வருடங்களாக விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஏ. இம்றுபாஸ்கான் நிந்தவுர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுகளில் மிகச்சிறப்பாகக் கடமையாற்றியுள்ளார்.
சிறந்த விளையாட்டு வீரரான ஏ. இம்றுபாஸ்கான் ஒலுவில் பிரதேசத்தில் முன்னணி விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்து கொண்டு மாவட்ட, தேசிய மட்டங்களில் அக்கழகம் சம்பியன் கிண்ணத்தைப் பெறுவதற்கும் முக்கிய வீரராகத் திகழ்ந்துள்ளார்.
அத்தோடு சிறந்த கடினபந்து கிரிக்கெட் வீரராகவும் விளையாடிவரும் ஏ. இம்றுபாஸ்கான் கூடுதலான அரைச்சதங்களையும் பெற்றுள்ளதுடன் தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளார்.
பிரதேச வாதமும்,தனிப்பட்ட விருப்பு, வெறுப்பும் இல்லாமல் விளையாட்டுத்துறையினதும், விளையாட்டு வீரா்களினதும் அபிவிருத்தியை முதன்மையாகக் கொண்டு செய்படும் ஏ. இம்றுபாஸ்கான் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்கு விளையாட்டு உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டிருப்பதை சகல விளையாட்டுக் கழகங்களும் பாராட்டியுள்ளதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றிய எம்.எச். அஸ்வத் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள சகல விளையாட்டுக் கழகங்களும் புதிய விளையாட்டு உத்தியோகத்தருடன் தொடர்புகளைப் பேணுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக ஏ.இம்றுபாஸ்கான் நியமனம் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக ஏ.இம்றுபாஸ்கான் நியமனம் Reviewed by Sifnas Hamy on April 08, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3