Responsive Advertisement 2

அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் தின நிகழ்வு

 



(எஸ்.எம்.அறூஸ், சியாத் எம்.இஸ்மாயில்)

அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச தாதியர்கள் தின நிகழ்வு சனிக்கிழமை இன்று அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அக்கறைப்பற்று ஆதாதர வைத்தியசாலை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் டி.கோகுலராஜ் நெறிப்படுத்தலில் தாதிய பரிபாலகர் பி.ரி.நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கறைப்பற்று அதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் TSRTR ரஜாப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக அக்கறைப்பற்று விபுலானந்த சிறுவர் இல்லத்தின் தலைவர் வீ.கைலாயப்பிள்ளை, HNB வங்கியின் அக்கறைப்பற்று கிளை முகாமையாளர் டபிள்யு.எம்.றியாஸ் மற்றும்  வைத்தியர்கள்,கணக்காளர்,நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது தாதியர்கள் எமது எதிர்காலம் எனும் கருப்பொருளில் சர்வதேச தாதியர் தினம் இம்முறை கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சிரேஸ்ட தாதியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

விசேட பேச்சாளராகக் கலந்து கொண்ட  அக்கறைப்பற்று விபுலானந்த சிறுவர் இல்லத்தின் தலைவர் வீ.கையாலயப்பிள்ளை தாதியர்கள் பணிகள் தொடர்பில் உரையாற்றினார்.அத்தோடு தாதியர்களினால் கவிதை மற்றும் பாடல்கள் பாடப்பட்டதுடன் சபையோரின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






























































அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் தின நிகழ்வு அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் தின நிகழ்வு Reviewed by Admin on May 13, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3