(ஆதிப் அஹமட் றசீன்)
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இறக்காமத்தைச் சேர்ந்த ஏ.எல்.யூ. ஜுனைதா கடந்த ஆறு வருடங்களாக கடமையாற்றி இறக்காம பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதையிட்டு பிரியாவிடை நிகழ்வு நேற்றுக் காலை (12) வெள்ளிக்கிழமை சமுர்த்தி வங்கி சங்க கூட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கி சங்கத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா, கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம். முபாரக், அபிவிருத்தி உத்தியோகத்தர் (CBO) ஏ.எப்.ஆர்.ஷர்பீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் (Marketing) எம்.ஐ.ஷர்வீன், சமுர்த்தி வங்கிச் சங்க கட்டுப்பாட்டு சபையின் தலைவர் கே.எம்.கபீர், உதவித் தலைவர் ஏ.எம்.அக்ரம், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் எம்.முபிதா, முன்னாள் தலைவர் ஏ.எம்.அலாவுதீன், கணனி உதவியாளர் எஸ்.சாபித் அக்மல் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா அவர்களின் சேவைகள் மற்றும் அவரின் ஆளுமைகள் பற்றி அதிதிகள் மற்றும் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளால் நினைவுகூர்ந்து பாராட்டி வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
இதில் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எம்.அலாவுதீனால் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா பற்றி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு கையளித்து வைக்கப்பட்டது.
மேலும் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதாவின் கடந்த ஆறு வருட கால மக்கள் சேவையினை கெளரவித்து பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளால் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜுனைதாவுக்கு பிரியாவிடை நிகழ்வு
Reviewed by Admin
on
May 13, 2023
Rating:
Reviewed by Admin
on
May 13, 2023
Rating:

No comments: