(எம்.எம்.எம்.சாமில்)
SLPA ஒலுவில் வீட்டுத்திட்டத்திற்கு இன்று விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் ஒலுவில் பிரதேச இணைப்பாளர் எம்.ஜே.எம்.அஸ்ஹரின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் அமைந்திருந்தது.
ஒலுவில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும்,அமைச்சு மட்டத்திலும் எஸ்.எம்.எம்.முசாரப் எம்.பி குரல் கொடுத்து வந்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விஜயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.நியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Admin
on
May 07, 2023
Rating:



No comments: