அண்மையில் அகதிகள் குழுவுடன் பயணித்த கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்னாா் அந்த கப்பலை கண்காணித்தமை தொடா்பில் கிரீஸ் நாடு சரியாக பதிலளிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை அதிகாரிகள், குற்றம் சாட்டுகின்றனா்.
குறித்த கப்பல் தொடர்பில் கிரீஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி, குறித்த கப்பல் கிரீஸ் திசை நோக்கிப் பயணித்தமை சர்வதேச கடல் பகுதியில் தெளிவாகக் கண்காணிக்கப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், கிரீஸ் அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், கப்பல் இத்தாலியை நோக்கிச் செல்வதை அவதானித்ததால் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறியுள்ளனா்
இந்த விபத்தின் போது அந்த படகில் 350 பாகிஸ்தானியர்கள் இருந்த நிலையில் அவா்களில் 80 போ் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பாகிஸ்தான் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபகால வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தானியர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தமை இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் 80 பாகிஸ்தானியர்கள் பலி
Reviewed by Admin
on
June 24, 2023
Rating:
Reviewed by Admin
on
June 24, 2023
Rating:

No comments: