(எஸ்.எம்.அறூஸ்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றி ஒய்வு பெற்றுச்செல்லும் தாதிய உத்தியோகத்தர்களான எம்.ஏ.ஆப்தீன், ஜரினா சாதீக் ஆகியோரை பாராட்டிக் கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
தாதிய பரிபாலகர் பி.ரி.நௌபர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இங்கு ஓய்வு பெற்றுச்செல்லும் தாதிய உத்தியோகத்தர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டடனர்.
கணக்காளர் எம்.ஆர். நஸிமுல் ஹக், நிருவாக உத்தியோகத்தர் கே. விஜயகுமார், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாதியர்கள் இருவரும் அரச சேவையில் 30 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: