(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை
ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆதரவுடன் ஜம்இய்யதுல் உலமா சபையின் அட்டாளைச்சேனைக்
கிளை ஏற்பாடு செய்த க.கொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட தர்பிய்யா
செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
ஜம்இய்யதுல்
உலமா சபையின் அட்டாளைச்சேனைக் கிளை தலைவர் மௌலவி யு.எல்.நியாஸ் சர்க்கி தலைமையில் பெரிய
பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கல்முனை நீதவான் நீதிமன்ற
நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ரசீட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,பொத்துவில் பிரதேச செயலாளர்
எம்.ஐ.எம்.பிர்னாஸ் மற்றும் கல்விமான்கள்,மார்க்க உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்ததுடன் வளவாளர்களாகவும் செயற்பட்டனர்.
இங்கு மாணவர்கள்
சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகள் வரும் வரையான காலப்பகுதியிலும், உயர்தரக்
கல்வியை மேற்கொண்டு உயர்தரப்பரீட்சை எழுதும்வரையான காலப்பகுதி வரைக்கும் பிழையான செயற்பாடுகளிலும்,
பழக்க வழக்கங்களிலும் ஈடுபடாமல் தமது எதிர்காலத்தை வளமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென
கருத்துரைகள் வழங்கப்பட்டது.
நாட்டில்
அதிகரித்து வரும் போதைவஸ்து பழக்கம், புகை பிடித்தல், நாகரிக மோகம்,பிழையான பொழுதுபோக்குகள்
மாணவர்களை திசைமாற்றுவதால் எதிர்காலத்தில் குடும்பம்,சமூகம் என்று பல பிரச்சினைகளை
எதிர்நோக்க நேரிடவுள்ளதாகவும் இங்கு வளவாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜம்இய்யதுல்
உலமா சபையின் அட்டாளைச்சேனைக் கிளை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல நிகழ்வுகளை தொடர்ச்சியாக
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: