(எஸ்.எம்.அறூஸ்)
கிழக்கிலங்கையின் மூத்த இலக்கியவாதி மர்ஹூம் ஆசுகவி அன்புடீன் அவர்களது ஞாபகார்த்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலவிலே நினைவேந்தல் நிகழ்வு அட்டாளைச்சேனையில் நேற்று மாலை (2023.06.03) இடம்பெற்றது.
ஆசுகவி பொன்விழா
மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
பிரதித் தலைவரும்,சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபுர் தலைமையில் கடற்கரை விடுதியில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, முன்னாள் கிழக்கு
மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா
ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு,கல்விமான்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,ஊடகவியலாளர்கள்
என பலரும் கலந்து கொண்டு ஆசுகவி அன்புடீன் ஞாபகார்த்த உரையை நிகழ்த்தினர்.
கிழக்கு மாகாணம்
அம்பாரை மாவட்டத்தின் பாலமுனைப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஆசுகவி அன்புடீன் சாமரையில்
மொழி கலந்து, முகங்கள் ஐந்து,நெருப்பு வாசல்,தொப்புள்கொடியும் தலைப்பாகையும் போன்ற
ஆறு இலக்கிய நூல்களை வெளியிட்ட படைப்பாளியுமாவார்.





No comments: