(சிப்லியா அறூஸ்)
அம்பாரை
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிலைபேறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அணர்த்த முகாமைத்துவத்தை உள்ளடக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று வியாழக்கிழமை அக்கறைப்பற்றில்
இடம்பெற்றது.
அம்பாரை
மாவட்ட அணர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் அக்கறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்ற இச்செயலமர்வில்
அக்கறைப்பற்று பிரதேச செயலாளர் அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர்,தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஸ்லம் சஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்
கருத்துரையும் வழங்கினர்.
இங்கு,
கலந்து கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அணர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழி வகைகள் தொடர்பிலும் வளவாளர்கள் அறிவுறுத்தினர்.
உலக
அளவில் அணர்தங்களினால் பாதிக்கப்படும் நாடுகள் வரிசையில் இலங்கை ஐந்தாம் இடத்தை வகிப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் அம்பாரை மாவட்டத்தில் திட்டமிடப்படாத பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களே பாரிய வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இங்கு தெரிவித்தனர்.
No comments: