Responsive Advertisement 2

ரவூப் ஹக்கீமுக்கு புதிய பதவி

 



தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகிக் கொண்டுள்ளார்


குறித்த மேற்பார்வைக்குழுவின் தலைவராக சரத் வீரசேகர செயலாற்றுவதன் காரணமாக அவருக்குக் கீழ் தான் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.


அவர் தொடர்ந்தும் தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக்குழுவில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி தரப்பு முக்கியஸ்தா்கள் கோரிக்கை விடுத்திருந்த போதும் அவர் தனது முடிவில் உறுதியாக நின்று ஒதுங்கிக் கொண்டுள்ளார்


இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்

ரவூப் ஹக்கீமுக்கு புதிய பதவி ரவூப் ஹக்கீமுக்கு புதிய பதவி Reviewed by Admin on June 09, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3