அட்டாளைச்சேனையில் சட்டவிரோதமாக விவசாயக் காணிகளில் மண் இடப்பட்டு மூடப்படுவதை தடுக்க கடுமையான தீர்மானம் நிறைவேற்றம்
(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை
பிரதேச செயலக ஒருங்கிணைப்பு
குழுக்கூட்டம் இன்று 11.07.2023 ஆம் திகதி திகாமடுல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இவ் வருடத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி,சுகாதாரம்,வீதி அபிவிருத்தி, விவசாயம்,நீர்ப்பாசணம், விளையாட்டு, கட்டுமாண வேலைத்திட்டங்கள்,செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான அனுமதியும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
அத்தோடு
அட்டாளைச்சேனை புறத்தோட்டம் அஸ்ரப் வீதியின் மேற்குப் பக்கம் உள்ள விவசாயக் காணிகள் சட்டவிரோதமாக மண் இடப்பட்டு நிரப்பப்படுவதை உடனடியாக தடை செய்வதுடன் ஏற்கனவே நிரப்பப்பட்ட காணிகளில் உள்ள மண்ணை அகற்றுவதெனவும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதற்காக பிரதேச செயலாளர் தலைமையில்
ஒரு குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
மேலும்
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு இனங்க புறத்தோட்டம் பகுதியில் உள்ள அட்டாளைச்சேனை பெரிய ஜூம்அப் பள்ளிசாலுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணியை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கூட்டத்தில்
பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட்
சாபீர், உதவிப்பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ்,
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அப்துல் மஜீட், பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள்,அரச திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.
No comments: