Responsive Advertisement 2

இலங்கை 236 ஓட்டங்கள், மிலான் 72 ஓட்டங்கள்!

 


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் இன்று (21) ஆரம்பமானது.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் மிலான் ரத்னாயக்க 72 ஓட்டங்களையும் பெற்றனர்.

மிலான் ரத்நாயக்க இலங்கை அணிக்காக தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றமை குறிப்பிட்டதக்கது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி சார்பாக Chris Woakes மற்றும்  Shoaib Bashir ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இலங்கை 236 ஓட்டங்கள், மிலான் 72 ஓட்டங்கள்! இலங்கை 236 ஓட்டங்கள், மிலான் 72 ஓட்டங்கள்! Reviewed by Admin on August 21, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3