Responsive Advertisement 2

தேர்தல் முறைப்பாடுகள் 901 ஆக அதிகரிப்பு

 


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தேர்தல் சட்ட விதிகளை மீறியதாக கூறப்படும்  65 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று (23) வரையான காலப்பகுதியில் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறைப்பாடுகள் 901 ஆக அதிகரிப்பு தேர்தல் முறைப்பாடுகள் 901 ஆக அதிகரிப்பு Reviewed by Admin on August 24, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3