முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தடை?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசீம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிக்குரிய செயற்பாட்டு அறிக்கையை உடன் வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி வழங்கி பல கோடி ரூபாய் நிதியைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தரப்பு கடும் ஆத்திரமடைந்துள்ளதுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments: