Responsive Advertisement 2

மொட்டு Mp க்கள் கவர்ந்திழுக்கப்படுவது எப்படி..? மன்னிக்க முடியாத குற்றம என்கிறார் தயாசிறி

 



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஸ்ரீறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணிசமான எண்ணிக்கையிலான மதுபானம் மற்றும் துப்பாக்கி உரிமங்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 


"நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1200 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


அத்துடன் 300,000 ரூபா பெறுமதியானது முதல் அனைத்து வகையான துப்பாக்கிகளையும் வைத்திருக்கும்  உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறான செயலை மன்னிக்க முடியாது. மேலும், ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறே கவர்ந்து வருகிறார். 


அதேவேளை, தற்போதைய அரசாங்கம் வீடுகள் சேதப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திருத்துவதற்கு ஒரு வீட்டுக்கு 30 மில்லியன் ரூபா நிதியை பகிர்ந்தளித்துள்ளார்” என குற்றம் சுமத்தியுள்ளார். 

மொட்டு Mp க்கள் கவர்ந்திழுக்கப்படுவது எப்படி..? மன்னிக்க முடியாத குற்றம என்கிறார் தயாசிறி மொட்டு Mp க்கள் கவர்ந்திழுக்கப்படுவது எப்படி..? மன்னிக்க முடியாத குற்றம என்கிறார் தயாசிறி Reviewed by Admin on August 04, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3