Responsive Advertisement 2

விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

 



தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்  அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பின்  99 (13)(ஆ) உபபிரிவின் கீழ் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வெற்றிடத்தை நிரப்புமாறு குறித்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியின் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) பிரிவின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தெரிவத்தாட்சி அதிகாரி மூலம் அரசியலமைப்பின் 99 (13)(ஆ) உப பிரிவு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 64 (2) இன் கீழ், குறித்த தேர்தல் தொகுதிக்கான  பாராளுமன்ற உறுப்பினராக  லக்ஷ்மன் நிபுணாரச்சி  நியமிக்கப்பட்டுள்ளார்.

விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது Reviewed by Admin on September 23, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3