Responsive Advertisement 2

சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை மாவட்ட தலைவராக ரொஷான் நியமனம்!

 தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க இன்று (08) சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை மாவட்ட தலைவராகவும் மத்துகம தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.



இது தொடர்பான நியமனக் கடிதத்தை தாயக மக்கள் கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர வழங்கினார்.

தேசப்பற்றுள்ள தேசியவாத முகாமை தமது கட்சி பலப்படுத்தி வருவதாக தாயக மக்கள் கட்சியின் தலைவரான தொழில்முனைவோர் திலித் ஜயவீர இங்கு தெரிவித்தார்.

இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மாவட்ட தலைவராக தொழில்முனைவோர் உபாலி ஜயசேகர, கொழும்பு மாவட்ட அமைப்பாளராக ஏ.ஆர்.தினேந்திர ஜோன், இரத்தினபுரி மாவட்ட  தலைவராக பிரபாத் டி அல்விஸ் ஆகியோர் இன்று (08) நியமிக்கப்பட்டனர்.

அதேபோல், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த தொழில்முனைவோர்  திலித் ஜயவீர,

“நாங்கள் நம்பும் தேசப்பற்றுள்ள தேசியவாத அரசியலை இலங்கையில் ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வெற்றிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே, இந்த நாட்டை மகிழ்ச்சியான நாடாக மாற்றுவதற்கும், தொழில் முனைவோர் நாடு என்ற கருத்தை முன்வைப்பதற்கும், நமது தேசியத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதற்கெல்லாம் தேவையான பின்னணியை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை மாவட்ட தலைவராக ரொஷான் நியமனம்! சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை மாவட்ட தலைவராக ரொஷான் நியமனம்! Reviewed by Admin on October 08, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3