ரிசாட்டின் மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மூன்று முக்கிய விக்கட்டுக்கள் முசாரபின் பக்கம் வீழ்ந்தது.
(எம்.முகம்மட்)
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரபல சமூக சேவையாளரும், தொழிலதிபருமான எம். முஹம்மட் நசுறுதீன் (றபீக்), பிரபல வர்த்தகர் ஏ.கபூர் மற்றும் தொழிலதிபர் எம். நசார்தீன் ஆகியோரே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கயோடு இணைந்து கொண்டுள்ளனர்.
தொழிலதிபர் எம். முஹம்மட் நசுறுதீன் (றபீக்) அவர்கள் நகர வட்டார வேட்பாளராகவும், பிரபல வர்த்தகர் ஏ.கபூர் சின்னபுதுக்குடியிருப்பு வட்டார வேட்பாளராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டிருந்தனர்.
பொத்துவில் பிரதேசம் முசாரப் அவர்களின் கோட்டையாக இருக்கின்ற நிலையில் குறித்த மூவரின் இணைவும் மயில் கட்சிக்கு ஆகக்கூடியது 300 வாக்குகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்வதற்கு முதல் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அக்கட்சி சுமார் 4000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
முசாரப் அவர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு சுமார் 10000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் கோட்டையாக பொத்துவிலை மாற்றியமைத்தார்.
இந்நிலையில் மக்கள் காங்கிரஸிலிருந்து முசாரப் அவர்களின் வெளியேற்றத்துடன் அக்கட்சியின் அடித் தளம் முழுமையாக துடைத்தெறியப்பட்டிருந்தது. மீதமிருந்த சில ஒரு வாக்குகளும் குறிப்பிட்ட முக்கியஸ்தர்களின் மாற்றத்துடன் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் பொத்துவிலுக்கு படை பட்டாளங்களுடன் வருகை தந்தபோது அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் சமார் 50 க்கும் குறைவான மக்களே கலந்து கொண்டிருந்தமை எல்லோரும் அறிந்த விடயமாகும்.
பொத்துவில் பிரதேச மக்கள் கடந்த பொதுத்தேர்தலையும் விட இம்முறை இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக ஒற்றுமைப்பட்டு சிலிண்டர் சின்னத்தில் 10 ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களை வெற்றி பெறச்செய்வதற்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் வெற்றி அலையைப் பொறுக்க முடியாதவர்கள் பொத்துவில் பிரதேசத்தில் அவருக்கு மக்கள் ஆதரவில்லை என்கின்ற பொய்யான கதைகளை பரப்பி வருகின்றமை வேடிக்கையான விடயமாகும்.
ரிசாட்டின் மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மூன்று முக்கிய விக்கட்டுக்கள் முசாரபின் பக்கம் வீழ்ந்தது.
Reviewed by Admin
on
October 26, 2024
Rating:

No comments: