Responsive Advertisement 2

மஹிந்தவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

 



அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 6 உத்தியோகபூர்வ வாகனங்களில் 3 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையை கீழே காணலாம்




மஹிந்தவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு மஹிந்தவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு Reviewed by Admin on October 20, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3