Responsive Advertisement 2

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

 


டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 


மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். 

ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார். 

டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது டிரம்புக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. இதனால் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு பின்னடவுகளை ட்ரம்ப் எதிர்கொண்டுள்ளார். 

அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ட்ரம்ப் வரி விதித்தார். ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், கடுமையான பாதிப்பை சந்தித்தன. 

எனவே ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு Reviewed by Admin on May 29, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3