Responsive Advertisement 2

அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது

 



நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

கடந்த 27 ஆம் திகதி கொழும்பு, மெரியட் கோட்யாட் ஹோட்டலில் இடம்பெற்ற மதிப்பீடு சம்மேளனத்தின் 2025, மதிப்பீட்டு செயன்முறைகளின் எதிர்காலம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் வெளிப்படுவது நேர்மறையான போக்காகும் எனவும், பல தரப்பினரின் பங்கேற்பினை  காணக் கிடைக்கின்றமை  மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.  

 

இந மாநாடானது அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பரந்த சமூக தரப்பினர்களுக்கான ஒரு மேடையாகும் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அபிவிருத்தி செயமுறைகள் தோல்வியடையும் போது அதன் தாக்கம்  நிதி ரீதியாக மாத்திரமன்றி, வாழ்க்கை, ஜீவனோபாயம் மற்றும் சந்தர்ப்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.

 

கொள்கை மற்றும் நிகழ்ச்சிகளின் முழுமையான செயற்பாட்டை மதிப்பீடு செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே அவதானங்களை அடையாளம் காண்பதற்கும், முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கும், தேவையான சரிப்படுத்தல்களுக்கான சந்தர்ப்பமும் உருவாகும்.

 

அத்துடன் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், காலநிலை, மனித செயற்பாடுகள் போன்ற பிரிவுகள் ஊடாக பிரதிபலன்களை வலுப்படுத்துவதற்கும், மனிதர்களுக்கும் சூழலுக்கு சிறந்த நன்மைகளை பெறுவதற்கும் இது உதவியாக அமையும் எனவும்,  நம்பிக்கைக்குரிய சாட்சியங்கள் ஊடாக கொள்கைகளின் செயல்திறனை புரிந்துகொள்வதற்கும் இவ்வாறான மதிப்பீடு உதவுமெனவும் சுட்டிக்காட்டிய பிரதமர், அது வெறுமனே வெற்றி மாத்திரமன்றி, விசேடமாக நியாயம் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்க்கும் போதும், கொள்கைகளை திட்டமிடும் போதும், செயற்படுத்தலின் போதும் காணப்படும் பலவீனங்களை சுட்டிக்காட்டுவதற்கும் காரணமாக அமையும்

 

மதிப்பீட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கென நிறுவன கொள்ளளவை கட்டியெழுப்புதல், நம்பிக்கைக்குரிய தரவுகளுக்கென காலத்திற்கேற்ற அணுகல் உட்பட சாட்சியங்கள் மற்றும் தொடர் கல்வியை வரவேற்கும் நிர்வாக கலாசாரமொன்றை மேம்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  அரசிற்கு தமது செயற்பாடுகளின் பிரதிபலன்கள் குறித்தும், தேவைகளுக்கமைய வழங்கல் இடம்பெறுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கும் மதிப்பீட்டு செயன்முறைகள் காரணமாக சந்தர்ப்பங்கள் உருவாகுவதாக பிரதமர் தெரிவித்தார்.

 

குறித்த நிகழ்வில் பூகோள பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பீடு மன்றத்தின் தலைவர் கபீர் ஹாசிம், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ, தெற்காசிய மதிப்பீட்டாளர்களின் தலைவர் கலாநிதி ராஜீப் நந்தி, பிரிக்ஸ் புதிய அபிவிருத்தி வங்கியின் சுயாதீன மதிப்பீடு அலுவலக பணிப்பாளர் நாயகம் அஸ்வானி முது,  UNFPA சுயாதீன மதிப்பீடு அலுவலகத்தின் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட அதிகாரிகளும் இளைஞர்கள் மற்றும் வளர்ந்துவரும் மதிப்பீட்டாளர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது Reviewed by Admin on May 29, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3