தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது!
அபு அலா
அம்பாறை - சின்னப் பாலமுனை தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஒன்றை (18) சின்னப் பாலமுனை சுகாதார நிலையத்தில் ஆரம்பித்து வைத்தது.
தாய்மார் ஆதரவு கழகத்தின் தலைவி திருமதி என்.சுமைறா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் கலந்துகொண்டு குறித்த தையல் பயிற்சி பாடநெறி கட்டடத்தை திறந்து வைத்ததுடன் பயிற்சி பாடநெறியை ஆரம்பித்து வைத்தார்.
3 மூன்று மாதகாலத்தை அடிப்படையாகக் கொண்ட இப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியேருகின்றவர்கள் தங்களின் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை அடையமுடியும் எனவும் இந்த முன்மாதிரிமிக்க வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க பாடுபட்டவர்களை பாராட்டுகிறேன் என்று அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
மேலும் இந்தப் பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்பும் பெண்கள் குறித்த நிர்வாகத்தை தொடர்புகொண்டு இணைந்து கொள்ளமுடியும் என்ற ஆலோசனையையும் வழங்கி வைத்தார்.
தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது!
Reviewed by Admin
on
July 20, 2025
Rating:

No comments: