Responsive Advertisement 2

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு 27 வருட சிறை


பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. 


முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த தண்டனையை நேற்று (11) அறிவித்துள்ளனர். 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து, இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், 4 நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நிலையில், 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு 27 வருட சிறை முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு 27 வருட சிறை Reviewed by Admin on September 12, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3