Responsive Advertisement 2

இந்திய அணிக்கு பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு


 ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 40 ஓட்டங்களையும், Shaheen Shah Afridi 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 03 விக்கெட்டுக்களையும், Jasprit Bumrah மற்றும் Axar Patel ஆகியோர் தலா 02 விக்கெட்டிக்களை வீழ்த்தினர். 

இதன்படி இந்திய அணிக்கு 128 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு இந்திய அணிக்கு பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு Reviewed by bepositive tamil on September 14, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3