திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் ஐந்தினை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்று(17) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் கந்தளாய் 94ஆம் கட்டைப் பகுதியிலிருந்து இப்பாகமுவ பகுதிக்கு முச்சக்கர வண்டியில் ஐந்து போத்தல் வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற போது கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனை செய்த போதே ஐந்து போத்தல் வெளிநாட்டு சாராயம் கொண்டு சென்றதை கண்டறிந்துள்ளதாகவும் சந்தேக நபரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எப்.முபாரக்
மதுபானங்களை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர் கைது.
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:

No comments: