வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விற்பனை செய்த பாணிற்குள் துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வியாபார நிலையத்தில் பாணினை வாங்கி வீட்டில் சென்று அதனை வெட்டிய போதே துருப்பிடித்த நிலையில் ஆணி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பாணை வாங்கிய நபர் வியாபார நிலையத்தில் அது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார். அப் பாண் வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் உள்ள பேக்கரியில் பெறப்பட்டதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரியப்படுத்திய நிலையில், குறித்த பேக்கரி உரிமையாளருக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அது தொடர்பில் பொறுப்புடன் பதில் அளித்ததாக தெரியவில்லை. இதேவேளை, அண்மையில் குறித்த வியாபார நிலையத்தில் பெறப்பட்ட பாண் ஒன்றில் இருந்து நீளமான பச்சை நூல் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாணிற்குள் துருப்பிடித்த ஆணி (படங்கள்)
Reviewed by Admin
on
October 19, 2017
Rating:
Reviewed by Admin
on
October 19, 2017
Rating:


No comments: