Responsive Advertisement 2

இகல புலியன்குளம் மு.வித்தியாலயத்தில்பெளதிக குறைபாடுகள்.நீக்குமாறு பலர் வேண்டுகோள்.



அநுராதபுர மாவட்டத்தின் கிராமிய பிரதேசங்களில் ஒன்றான மரதங்கடவல, இகலப்புலியன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இகலப்புலியன்குளம் முஸ்லிம் வித்தியாலயம் தற்சமயம் பல குறைபாடுகளுடன் காணப்படும் நிலையிலும் கல்வியில் முன்னேறிவரும் பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.







தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்ட இப் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ. த (சாதாரண) தர வகுப்புக்கள் முதற்தடவையாக ஆரம்பிக்கப் பட்டதுடன் கடந்த 2016 ஆம் வருடம் முதற் தடவையாக சிறந்த பெறு பேறுகளையும் பெற்றது.அத்துடன் 2017 ல் நடந்த தரம் 5 புலமை பரிசில் பரீட்சையிலும் ஒரு மாணவி சித்தியடைந்தார்.அத்துடன் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும்,இப்பாடசாலை சிறந்து விளங்கும் நிலையில் ,இப்பாடசாலையில் பல்வேறு பெளதிக குறைபாடுகள் காணப்படுகின்றன.வகுப்பறை பற்றாக்குறை, ஆய்வுகூட மின்மை,போன்ற இன்னும் பல குறைபாடுகள் தொடர்ந்து காணப்படுகின்றன.கல்வித் துறையிலும்,இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னேறி வரும் இப் பாடசாலையின் பெளதிக குறைபாடுகளை சம்பந்தப் பட்டவர்கள் விரைவில் பெற்றுத் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.





ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.அநுராதபுரம் நிருபர்




இகல புலியன்குளம் மு.வித்தியாலயத்தில்பெளதிக குறைபாடுகள்.நீக்குமாறு பலர் வேண்டுகோள். இகல புலியன்குளம் மு.வித்தியாலயத்தில்பெளதிக குறைபாடுகள்.நீக்குமாறு பலர் வேண்டுகோள். Reviewed by Admin on October 19, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3