Responsive Advertisement 2

பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம்



வவுனியாவிற்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள வைசப்பிரகாசா பாடசாலைக்குள் இன்று காலை திடீரென உள்நுழைந்த மனநோயாளி ஒருவரினால் பாடசாலைக்குள் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,





வவுனியாவிற்கு ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை வருகை தரவள்ள நிலையில் வவுனியா சைவப்பிராகாச பாடசாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9மணியளவில் வனியா நகர்ப்பகுதிகளில் உலாவரும் மனநோயாளி ஒருவர் திடீரென பாடசாலைக்குள் உட் சென்றுள்ளார். இதையடுத்து கடமையிலிருந்த பொலிசார் உசார் அடைந்தது உடனடியாக குறித்த மனநோயாளியைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.





-சுடர்-














பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம் பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம் Reviewed by Admin on October 19, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3