வவுனியாவில் நூதன முறையில் பேரூந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (17) மதியம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து வவுனியா நகர்நோக்கி தனியார் பேரூந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணே 15 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
குறித்த தனியார் பேரூந்தில் நெடுக்குளத்தில் மறித்து ஏறிய ஆறு பெண்கள் பணத்தை பறிகொடுத்த பெண்ணை சுற்றி நெருக்கமாக நின்றதாகவும் குருமன்காட்டுச் சந்தியில் குறித்த பெண்கள் குழு இறங்க முயற்சித்த வேளை தனது கைப்பை திறந்து இருப்பதை அவதானித்து கைப்பையை பார்த்தபோது பணம் திருடுபோயிருந்த நிலையில் அதிர்ச்சியில் சத்தமிட்டு அழுததுடன் குறித்த ஆறு பெண்களுமே தனது பணத்தை திருடியுள்ளனர் என தெரிவித்த நிலையில் ஒரு பெண் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்ததுடன் குறித்த பெண்களை ஏற்றிவந்த தனியார் பேரூந்தும் குருமன்காட்டுச் சந்தில் அவர்களை இறக்கிவிட்டு நழுவிச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து சம்வ இடத்திற்கு சென்ற பொலிசார் பணத்தை பறிகொடுத்த பெண்ணையும் மற்றும் சந்தேகத்திற்குரிய ஐந்து பெண்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பெண்கள் குழு குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆயுள்வேத சிகிச்சைக்காக வவுனியா வந்ததாகவும் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து பணத்தை பறிகொடுத்த பெண் தனது பணத்தை தந்தால் பொலிசில் முறைப்பாடு செய்யாமல் விட்டுவிடுவதாக தெரிவித்ததையடுத்து குறித்த பெண்கள் குழு பணத்தை திருப்பி கொடுத்த நிலையில் பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் குறித்த பெண்கள் குழுவினரே பணத்தை கொள்ளையிட்டுள்ளனர் என தெரிவித்த பொலிசார் பணத்தை பறிகொடுத்தவர் முறைப்பாடு செய்ய முன்வராத நிலையில் அப் பெண்களை கைது செய்ய முடியவில்லை என தெரிவித்தனர்.
பேரூந்தில் நூதன முறையில் பணம் திருட்டு! பெண் திருடர்கள் குழுவாக கைவரிசை!!
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:

No comments: