Responsive Advertisement 2

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 பற்றிய அறிமுகம் கட்டாயம் வாசிங்க...




இந்த தேர்தல் முறை புரியாதவர்கள் இதனைக் கவனிக்கவும்!





கலப்பு முறை என்றால் என்ன? 





அது எப்படி கணக்கு பார்க்கிறது?





இந்த பெண்களும் கட்டாயம் போகணுமாமே! அதனுடைய விளக்கம் என்ன?





இதெல்லாம் நமக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணும் நண்பர்களே. இல்லாட்டி இவர்கள் நம்மட தலையில தேங்கா ஒடச்சிட்டு போய்டுவாங்க...





கலப்புத் தேர்தல் முறை என்பது தொகுதிவாரி தேர்தல் முறையையும் விகிதாசார தேர்தல் முறையையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இம் முறை ஜேர்மனியில் சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றது. 1946 இல் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, மெக்சிக்கோ, நியுசிலாந்து போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது.





கட்சி மூலம் வட்டாரத்தில் கூடிய வாக்கைப் பெற்றவர் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவார். இது தொகுதிவாரி முறையின் பண்பு. கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களும் கிடைக்கும். இது விகிதாசார முறையின் பண்பு. ஆகவேதான் இது கலப்பு முறை எனப்படுகின்றது.





இதில ஒரு சீன வித்தையும் இல்ல. சிம்பிளா விளங்கிக் கொள்ளலாம்!





இப்ப உதாரணத்துக்கு ஒரு ஊரை எடுப்பம். அதுல ஒரு 12 வட்டாரம்(தொகுதி) பிரிச்சிருக்கு என்று எடுத்துகொள்ளுங்க. இப்ப இந்த கலப்பு முறையில எப்படி வரும் என்றால்.





முதல்ல வட்டாரம்(தொகுதி) எல்லாம் கூட்டி 60 சதவீதமாக கணக்கெடுப்பாங்க; பிறகு அதோட சேர்த்து விகிதாசர முறையிலும் 40 சதவீதம் தெரிவு செய்வாங்க.





அதாவது நம்மட பாசையில சொல்ல போனால், 12 வட்டாரத்துக்கும் 12 பேர், அதோட சேர்த்து போனஸா 8 பேர்! அப்ப மொத்தம் 20 பேர் சபைக்கு போவாங்க!!





சரியோ அவ்ளோதான் கணக்கு!





இப்ப தேர்தல் நடக்குது.





ஒவ்வொரு வட்டாரத்துலையும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை போடும். நம்ம விரும்புற கட்சிக்கு வோட்டு போடுவம். இப்ப அதில எந்த கட்சி அதிகமாக வோட்டு எடுக்குதோ அந்த கட்சி அந்த வட்டாரத்தில வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.





அப்ப அந்த 12 பேரையும் தெரிவுசெய்து முடிஞ்சி!





சரி இப்ப மற்ற 8 ஆசனங்களும் எப்டி தெரிவு செய்வாங்க?





அதுக்கு என்ன செய்வாங்க என்றால் நண்பர்களே,





எல்லா வட்டாரத்துலையும் எல்லா கட்சிகளும் எடுத்த மொத்த வோட்டுகளை கூட்டுவாங்க. அதாவது ஊர்ல அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை கூட்டுவாங்க.





உதாரணத்துக்கு அப்பிடிக் கூட்டி ஒரு 15,000 வோட்டுகள் வருது என்று எடுத்துக்கோங்க!





இப்ப அந்த 15,000 வோட்டையும் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையான 20 ஆல பிரிப்பாங்க. அப்டி பிரிச்சா 750 வரும்.





இப்ப அந்த 750 வோட்டுத்தான் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான ஆகக்குறைஞ்ச வோட்டு! சரியோ?





இப்ப என்ன செய்வாங்க என்றால்,





ஒவ்வொரு கட்சியும் எல்லா வட்டாரங்களையும் சேத்து மொத்தமா எத்தின எத்தின வோட்டு எடுத்திருக்கு என்று பார்ப்பாங்க.





உதாரணத்துக்கு கூட்டமைப்பை எடுப்பம். அந்த கட்சி எல்லா வட்டாரங்களையும் சேர்த்து ஒரு 6000 வோட்டு எடுத்திருக்கு என்று வச்சுக்கொள்வோம்.





இப்ப இந்த 6000 வோட்டுக்கும் எத்தனை ஆசனம் கிடைக்கும் என்று கணக்கு பார்ப்பாங்க. அப்படி என்றால், இந்த 6000 ஐயும் 750 ஆல பிரிப்பாங்க. அப்படி பிரிச்சா 8 வரும். அதனுடைய அர்த்தம் என்ன என்றால் த.தே.கூ க்கு மொத்தம் 8 ஆசனங்கள் போய்ச் சேரனும்.





சரியோ!





இப்ப கூட்டமைப்பு எத்துன வட்டாரத்துல வெற்றி பெற்றிருக்கு என்டு பார்ப்பாங்க. உதாரணத்துக்கு அவங்க 5 வட்டாரத்துல வெற்றி பெற்றிருந்தால், அந்த ஐந்தையும் கழித்துவிட்டு அவங்களுக்கு போய் சேர வேண்டிய மிச்சம் 3 ஆசனங்களும் அந்த போனஸ் லிஸ்ட்டில இருந்து வழங்கப்படும்.





அதோட கேம் ஒவர்!





இன்னும் ஒரு உதாரணமும் சொல்லணும்.





இப்ப ஒரு சுயேட்சை குழு எலக்சன்ல நிக்கிது என்று வச்சிகோங்க. இப்ப அவங்க ஒரு வட்டாரத்துலயும் வெற்றி பெறேல்ல என்று எடுப்பம்.





ஆனால்,





எல்லா வட்டாரங்களையும் சேத்து அவங்களுக்கு ஒரு 800 வோட்டு கிடைச்சிருக்கு என்று எடுத்தால், அவங்களுக்கும் போனஸ் லிஸ்டுல இருந்து ஒரு ஆசனம் வழங்கப்படும். ஏன் என்டால் அவங்க ஒரு ஆசனத்துக்கான ஆகக்குறைஞ்ச வோட்டு எண்ணிக்கையான 750 எடுத்திருக்காங்க!!





ஆகவே இதில எல்லா கட்சிகளுக்கும் எல்லா வகையிலையும் வெற்றி பெறலாம்.





ஒரு கட்சிக்கு ஒரு வட்டாரத்துல மட்டும்தான் வாக்கு இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு. அப்பிடி இல்லாம ஊருக்குள்ள பரவலாக வாக்குகள் இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு.





இதில லிஸ்டு போட்றத்துல இன்னொரு விசியமும் இருக்கு. அது என்ன என்றால்,





வாக்காளர்கள் வாக்களிப்பது மிகவும் இலகு. அதாவது தனது வட்டாரத்தில் தனக்கு விருப்பமான வேட்பாளர் போட்டியிடும் கட்சிக்கு மட்டும் புள்ளடி இட்டால் போதும்.





இப்ப ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் ஒவ்வொரு ஆள் நியமக்கப்பட்டு ஒரு லிஸ்ட்டு போடுவாங்க தானே?





ஆமாம்!





அதுக்கு மேலதிகமாக இன்னுமொரு போனஸ் லிஸ்ட்டும் நிரப்பி கொடுக்கப்படும். அதாவது எங்களுக்கு போனஸ் ஆசனம் கிடைக்கும் பட்சத்தில் நாங்க இதுல இருந்து ஆக்கள் நியமிப்போம் என்று கொடுப்பாங்க.





ஆனா அதில சுவாரஷ்யம் என்ன என்றால், கட்டாயம் அந்த லிஸ்ட்டில இருந்து தான் போனஸ் ஆசனத்துக்கு ஆக்கள் போடணும் என்று கட்டாயம் இல்ல. வட்டாரத்துல தோல்வியடைந்த ஆக்களையும் போடலாம்.





சரியோ அவ்வளவுதான் விஷயம்.





சரி இப்ப, அந்த பெண்கள் ஆசனங்கள் தொடர்பான விளக்கம் என்ன?





கட்டாயம் 25 சதவீதம் சபைக்கு பெண்கள் நியமிக்கப்படவேணும் என்று சொல்றாங்களே அப்படி பார்த்தால் அந்த 20ஆசனங்களில் 5 ஆசனங்கள் பெண்களா இருக்கனுமா? அப்டின்னு நீங்க யோசிக்கிறது நியாயம்.





ஆனால், இதை பத்தி எல்லா கட்சிகளும் பயப்பட தேவையில்ல மக்களே!





ஏன் என்றால்! 3 ஆசனங்களுக்கு மேலதிகமாகவும் மொத்த வாக்குகளில் 20% ஆன வாக்குகளுக்கு மேலதிகமாகவும் பெறுகின்ற கட்சிகள் மட்டும்தான் அந்த கணக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள்.





ஆகவே அந்த லிஸ்ட்டுக்குள்ள வாற கட்சிகளில் பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில், அவர்களின் போனஸ் லிஸ்ட்டிருந்து கட்டாயம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.





சில நேரங்களில் பெண்கள் எண்ணிக்கை 25%ஐ விட குறையவும் வாய்ப்பிருக்கு.





கட்சிகள் எடுக்கன்ற ஆசனங்களின் நிலைப்பாட்டை பொறுத்து தேர்தல் ஆணையம் அதனை அனுமதிக்கும்.





சரியோ. அதுதான் அந்த விளக்கம்.





கலப்புத் தேர்தல் முறையின் நன்மைகளாவன,



  1. பலமான எதிர்க்கட்சி உருவாகும்.

  2. விருப்பு வாக்கு பிரச்சனைகள் ஏற்படாது.

  3. சிறுபான்மையினருக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்கள் கிடைக்கும்.

  4. பிரதிநிதிக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படும்.

  5. பிரதேச ரீதியாகவும், வட்டார ரீதியாகவும் அபிவிருத்தி ஏற்படும்.







குறைபாடுகளாவன,



  1. கட்சி ஆதிக்கம்.

  2. எல்லை பிரிப்பு ரீதியான குறைபாடுகள்.

  3. பட்டியல் மூலம் தகுதியற்றோரும் வருதல்.

  4. கணிப்பிடுதல் மக்களுக்கு விளங்காமை.













உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 பற்றிய அறிமுகம் கட்டாயம் வாசிங்க... உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 பற்றிய அறிமுகம் கட்டாயம் வாசிங்க... Reviewed by Admin on December 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3