எந்தவித அபிவிருத்தியும் காணாது புறக்கணிக்கப்பட்டு வந்த அநுராதபுரம் தேவ நம்பிய திஸ்ஸபுர நான்காம் பிரிவு முஸ்லிம் குடியிருப்பில் சுமார் 21 வருடங்களுக்குப் பிறகு மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க முதலாவது அரசாங்க கட்டடமொன்றை (பிரஜா சாலாவ) அமைப்பதற்கு அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் முன் வந்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் கடந்த (16) இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் வெகு சிறப்பாக தேவநம்பிய திஸ்ஸபுர முஸ்லிம் குடியிருப்பில் இடம் பெற்றபோது ,சமூக சேவையாளர் ரிபாஸ்(ஜே. பி) இதற்கான அடிக்கல்லை நட்டிவைப்பதையும்,பள்ளி நிர்வாகத் தலைவர் எம்.ஏ.எம்.தில்ஸான் உட்பட நிருவாகிகள்,பொது மக்கள்,நலன் விரும்பிகள் என பலர் இதில் கலந்து கொள்வதையும் படத்தில் காணலாம்.
அனுராதபுரம் நிருபர்/ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.
அநுராதபுர தேவ நம்பிய திஸ்ஸபுர 4 ஆம் பிரிவு முஸ்லிம் குடியிருப்பில் புதிய அரச கட்டடம்
Reviewed by Admin
on
December 03, 2017
Rating:
Reviewed by Admin
on
December 03, 2017
Rating:

No comments: