Responsive Advertisement 2

பாடசாலை சீருடை வவுச்சர்கள் அடுத்தவாரம் பகிரப்படும் - கல்வியமைச்சு




பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் தற்போது அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 





அந்த வவுச்சர்கள் எதிர்வரும் வாரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 





42 லட்சத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்காக 2370 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்களும், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்காக 75 மில்லியன் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன. 





அவை எதிர்வரும் வாரங்களில் மாணவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. 





குறித்த சீருடை வவுச்சர்களின் மொத்த பெறுமதி 2445 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.



பாடசாலை சீருடை வவுச்சர்கள் அடுத்தவாரம் பகிரப்படும் - கல்வியமைச்சு பாடசாலை சீருடை வவுச்சர்கள் அடுத்தவாரம் பகிரப்படும் - கல்வியமைச்சு Reviewed by Admin on December 03, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3