விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே கையூட்டல் ஆணைக்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னனியின் பதில் பொது செயலாளர் கபிலகமகே இன்று இதனை தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவுக்கு எதிராக உத்தியோக பூர்வமாகவும் உத்தியோக பூர்வமற்ற வகையிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையிலேயே, விமல் வீரவன்ச தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்குகளை பிரசாரம் செய்வதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்..
Reviewed by Admin
on
December 03, 2017
Rating:
Reviewed by Admin
on
December 03, 2017
Rating:

No comments: