Responsive Advertisement 2

கண்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, 6 பேர் கைது



ஆயுர்வேத மசாஜ் சென்டர் எனும் போர்வையில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினால் இன்று (28) சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதிலிருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்நிறுவனத்தை நடாத்திய முகாமையாளர் உட்பட ஐந்து பெண்கள் அடங்குகின்றனர்.


பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிறுவனத்துக்குள் நுழைவதற்கு 1500 ரூபா அறவிடப்படுவதுடன், பின்னர் வேறு கட்டணங்களும் அறவிடப்பட்டு வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




கண்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, 6 பேர் கைது கண்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, 6 பேர் கைது Reviewed by Admin on December 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3