எமது மார்க்கத்தில் குறிய முறையில் நடந்து கொள்ளுதல், ஏனைய மாற்றுக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தாக்கும் விதத்தில் நடந்துகொள்வதை தவிர்ந்தும், அரச நிருவனங்களுக்கு இடையூறுகள் எற்படத்தாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை என்பனவற்றின் உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் எறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் (17) நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் போட்டி இடுகின்ற வேட்பாளர்கள் எல்லோரையும் மதித்து நடக்கக் கூடியவர்களாகவும், மாற்றுக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கின்ற மக்களுக்கு எவ்வித தீங்குகளையும் உண்டு பன்னாமலும் நாம் இருக்கவேண்டும். கட்சியின் கருத்துக்களை முன்வைத்துச் செல்லக்கூடியவர்களாக நாம் இருக்கவேண்டியது காலத்தின் தேவைகளாக அமைந்து காணப்படுகின்றது என்றார்.
ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -
வேட்பாளர்கள் எல்லோரையும் மதித்து நடக்கக் கூடியவர்களாக நாம் இருக்கவேண்டும்
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:


No comments: