Responsive Advertisement 2

திருநாவற்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு மீட்பு



வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றை துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.





இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.





குறித்த மோட்டர் குண்டு செயலிழந்த நிலையிலேயே காணப்பட்டது.





குறித்த வீட்டில் முன்னர் விடுதலைப் புலிகளும் அதன் பின்னர் பொலிசாரும் பயன்படுத்தியிருந்த நிலையில் தற்போது வீட்டு உரிமையாளரே வசித்து வருகின்றனர்.





வவுனியா  செய்தியாளர்-








திருநாவற்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு மீட்பு திருநாவற்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு மீட்பு Reviewed by Admin on December 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3