உலகில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய பெருமையும், கெளரவமும் இலங்கை மக்களைச் சாரும். அந்த கெளரவத்தை தொடர்ந்தும் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இம்முறை உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கட்டாயம் வழங்கப்படுவது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையில், அதற்குத் தேவையான அனைத்து ஒழுங்குகளும் இலங்கை அரசினால் எடுக்கப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கேரளாவில் தெரிவித்தார்.
கேரளா பிராந்திய அரசினால், "கேரளா பிரதேச சபைகளில் பெண்களின் உளக்குமுறல்" எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று நாள் கருத்தரங்கில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டதாவது,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இலங்கை நாட்டு மக்களுக்கு வரலாற்றில் அதி சிறந்த தேர்தலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏன்... நாட்டின் அபிவிருத்தியில் பெண்களும் அவர்களின் பங்களிப்புக்களை எதிர்காலத்தில் எவ்வித அச்சமுமின்றி வழங்குவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம்.
பெண்களுக்கு அதி உயர் பட்ச கெளரவம் மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நன் நோக்கிலேயே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதன்காரணமாக, அவர்கள் பல்வேறு கோணங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைப் புரியவும் பாரிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்முறை இம்மன்றங்களில் 25 வீதமான பெண்கள் போட்டியிடுவதை பெருமையுடன் கூறவேண்டும் என்றார்.
இக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் உள்ளிட்ட இலங்கையைப் பிரதி நிதிப்படுத்திச் சென்ற 13 பேர் அடங்கிய தூதுக் குழுவினருக்கு கேரளா மகளிர் அமைப்புக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதிகளுக்கு முதற்தடவையாக முன்னுரிமை
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:

No comments: